செங்கோட்டை ஸ்ரீராம்

எனக்குள்ளே கருக்கொண்ட எண்ண விருட்சத்தின் விதைச் சிதறல்கள்...

My Photo
Name: senkottai sri.sriram
Location: Chennai, TamilNadu, India

காவிரித்தாய் மடியில் பிறந்து (திருச்சி), பரணித்தாய் மடியில்(நெல்லை) வளர்ந்தேன். பள்ளி வாழ்க்கை - பெரும்பாலும் தென்காசியில். கல்லூரி - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி (பி.எஸ்ஸி கணிதம் 1992-95), மதுரை காமராஜர் பல்கலை. (எம்.பி.ஏ 1997-99) முதல் பணி - மெடிக்கல் ரெப். ஆயுர்வேதத் துறை, அலோபதி. பின் 99 முதல் சென்னையில் பத்திரிகைப் பணி. சுமார் ஐந்து வருடங்கள் - மஞ்சரி டைஜஸ்ட் இதழாசிரியராக... இரண்டரை வருடங்கள்- விகடன் பிரசுரம் பொறுப்பாசிரியராக... தற்போது, சக்தி விகடன் பொறுப்பாளராக இதழ் தயாரிப்புப் பணியில்...

Friday, November 06, 2009

பேயாழ்வார் அவதார உற்ஸவத்தில் ஒருநாள்...



இங்கே நீங்கள் பார்ப்பது, சென்னை மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் பேயாழ்வார் ஸ்வாமியின் அவதார உற்ஸவத்தில் ஒருநாள்... இந்த பத்து தினத் திருவிழாவில் ஒருநாள் ஆழ்வார் திருவீதியுலா வந்தபோது எடுத்த படம் இது. ஆழ்வாருக்கு என்னமாய் அலங்காரம் செய்திருக்கிறார் பாருங்கள். ஆழ்வார் ஜொலிஜொலிப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இனி என் எண்ணங்கள்... இங்கே!
தமிழ் பக்தி இலக்கிய வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வைணவ ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் மூவர் முக்கியமானவர்கள். களப்பிரர்கள் காலம் என்று தமிழகத்தின் இருண்ட காலத்துக்குப் பிறகான காலத்தில், மக்களின் மத்தியில் பக்தியையும் பண்பாட்டையும் வளர்க்க இறையருளால் அவதரித்தவர்கள் ஆழ்வார்கள்.
முதல் ஆழ்வார்கள் மூவரின் காலம் என்று கி.பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டுகள் என்று வரலாற்றுக் கால அடிப்படையில் ஆராய்ச்சிகளைச் செய்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
பொய்கையார், பூதத்தார், பேயார் என்ற இந்த மூவரில் கடைசி ஆழ்வாரான பேயாழ்வார் அவதரித்த இடம் மயிலாப்பூர் என்ற மயூரபுரி. சென்னைப் பட்டணம் ஏதோ இப்போது தோன்றிய புதிய நகரமாக, அதாவது ஆங்கிலேயர் காலடி வைத்த இந்த நான்கு நூற்றாண்டுகளுக்குள் தோன்றிய நகரமாகச் சொல்கிறார்கள். நகர் அமைப்பு என்று உருவானது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த நகர் அமைப்பு எவ்வளவு மோசமான திட்டமிடல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மழைக்காலத்தில் சென்னை நகரைப் பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
ஆனால், இந்தப் பகுதியின் வரலாறு, மிகப் பழைமையானது. காஞ்சிபுரத்தின் வரலாற்றுத் தொன்மை எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது இந்தப் பகுதியின் வரலாறு. கி.மு. காலத்தில் இருந்து இந்தப் பகுதிகளில் நல்ல நாகரிகம் வளர்ந்திருக்கிறது.
திருவள்ளுவர் பிறந்த இடம் என்று மயிலாப்பூரைக் குறிக்கிறார்கள். அவர் பிறந்த இடம் இங்கே ஒரு கோயிலாக உள்ளது. அதுபோல், சற்று தொலைவிலேயே அருண்டேல் தெரு என்று இப்போது வழங்குகிற தெருவில் பேயாழ்வாரின் அவதார தலம் உள்ளது. அங்கே, ஒரு கிணறு உள்ளது. அதனடியில்தான் அயோனிஜராக பேயாழ்வார் அவதரித்தார் என்கிறது வைணவ மரபு வரலாறுகள்.
இந்த இடம் தற்போது ஆக்கிரமிப்புகளின் பிடியில் உள்ளது. இரும்புக் கடைகள், சைக்கிள் கடைகள், இன்னும் எஸ்டிடி பூத் என்று கடைகளின் ஆக்கிரமிப்புகள் என்றால், பேராசை மனிதர்களின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தால், நம் வரலாற்றுத் தொன்மங்களை இழக்கும் நிலையின் உண்மை சொரூபத்தை இந்த பேயாழ்வார் அவதார தலத்திலேயே நாம் காணலாம்.
ஆனால், மயிலாப்பூரில் உள்ள முக்கியமான இரு பெருமாள் கோயில்களான மாதவப் பெருமாள் கோயில் மற்றும் கேசவப் பெருமாள் கோயில் சார்பில் இந்த அவதார இடத்துக்கு வந்து பேயாழ்வார் உற்ஸவத்தை வெகு விமரிசையாக நடத்துகிறார்கள். இந்த இரண்டு கோயில்களுமே, பேயாழ்வார் அவதார ஸ்தலம் என்று சொல்லி, உற்ஸவங்களை போட்டி போட்டு நடத்துகிறார்கள். மிக பிரம்மாண்டமாக! அம்மட்டில் நமக்கு சந்தோஷமே! காரணம் உற்ஸவம் நடக்கிறதே!
மாதவப் பெருமாள் கோயில் பேயாழ்வார்தான் ஆசாரியர்கள் காட்டிய ஒரிஜினல் பேயாழ்வார் விக்ரஹம் என்கிறார் கோயில் பட்டர். அடியேன் எழுதிய 'தமிழ்மறை தந்த பன்னிருவர்" புத்தகத்தில், இந்த அவதாரத் தலத்தைப் பற்றி குறிப்பிட்ட போது, "கேசவப் பெருமாள் கோயில் அருகில் இருக்கும் இந்த அவதார தலத்தில்" என்று எழுதியிருந்தேன். அதற்கே, மாதவப் பெருமாள் கோயில் பட்டர் என்னிடம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். ''என்ன ஸ்வாமி, பத்து வருஷங்களுக்கும் மேலாக நம்ம மாதவப் பெருமாள் கோயில் பக்கத்துலயே இருந்துண்டு, கோயிலுக்கும் அடிக்கடி வந்துண்டிருக்கீரே! நீரே இப்படி அந்தக் கோயில் பெயரைப் போட்டு எழுதலாமா? நம்ம மாதவப் பெருமாள் கோயில்லதான் நின்னுண்டு இருக்கற மாதிரி உற்ஸவர் பேயாழ்வார் விக்ரஹம் உண்டு. (முதலாழ்வார்கள் மூவருமே நின்னுண்டுதான் இருப்பார்கள் சரிதானே!)... புஸ்தகத்தில் அருமையாக வரைந்து வாங்கி ஒரு படத்தைப் போட்டிருக்கீரே அதுல எப்படி இருக்கார்னு பாரும். அத சரியா போட்டுட்டு பேரை மட்டும் மாத்திட்டீரே" என்று!
ஆயினும், கேசவப் பெருமாள் கோயில்லயும் இப்போது உற்ஸவங்கள் களைகட்டுகின்றன. மேள தாளங்கள், வாத்தியங்கள், பூமாலைகள், யானை குதிரை என மரியாதைகள் எல்லாம் அமர்க்களப்படுகின்றன.
இப்போது, கேசவப் பெருமாளுக்குப் போட்டியாக அருகிலேயே ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸேவை சாதிக்கிறார்- தேசிகர் ஸ்வாமி சஹிதமாக! கேசவப் பெருமாள் கோயிலில் ஏதாவது உற்ஸவம் என்றால் போதும்... அவ்வளவுதான்... புதிது புதிதாக தேசிகர் ஸ்வாமி சந்நிதி ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலிலும் உற்ஸவங்கள் தடபுடல் படும். பிறகென்ன...மோதலுக்குக் கேட்கவா வேண்டும்? இந்த வருடம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மயிலாப்பூருக்கு வருகை தந்தபோது, பெருமாள் முன்னாலேயே அஹோபில மட ஜீயரையும் வைத்துக்கொண்டே கொஞ்சம் அரசியல் நடத்தினார்கள். அரசனான கிருஷ்ணன் ஸ்ரீ பார்த்தசாரதி முன்னாலேயே அரசியல் நடத்தினால் நிலைமை என்னாகும்..? ம்... ஹ்ம்... என்ன செய்வது?

அந்தக் காலத்தில் சர்ச்சைகள் செய்து சமயத்தை வளர்த்தார்கள்.
இப்போது சமயத்தை வளர்க்க சர்ச்சைகள் செய்கிறார்கள்!

Tuesday, October 27, 2009

செண்பகாதேவி அருவிக்குச் செல்வோமா?







































திருக்குற்றாலம் - செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் பாதை இது. மெயின் சாலையில் இருந்து சிற்றருவிக்குச் செல்லும் வழி இது. இதனைத் தொடர்ந்து இன்னும் மலை மேல் சுமார் 3 கி.மீ ஏற வேண்டும். மெயின் அருவிக்குச் செல்லும் தண்ணீரில் சிறுதடுப்பு ஏற்படுத்தி சிற்றருவிக்கு தண்ணீர் வர வழி ஏற்படுத்தினார்கள். இந்த சிற்றருவியில் பெண்களும் குழந்தைகளும் மிகவும் பாதுகாப்பாகக் குளிக்கலாம். தனி அறை போன்ற அமைப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே கொஞ்சம் கட்டணமும் உண்டு. மலை மேல் ஏறும் அசத்தல் அனுபவமே அலாதிதான். வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிடாதீர்கள். முன்பெல்லாம் எல்லோருமே இந்த சிற்றருவி தாண்டி, செண்பகாதேவி அருவிக்குச் சென்றார்கள். எந்த வித கெடுபிடிகளும் இல்லாமல்! ஆனால், இப்போது கெடுபிடிகள் அதிகம். பெரும்பாலும் சிற்றருவி தாண்டி யாரையும் அனுமதிப்பதில்லை. வருங்காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக, செண்பகாதேவி அருவிக்கும்கூட‌ யாருமே செல்ல முடியாத சூழலும் ஏற்படலாம். இப்போது தேனருவிக்கு செல்ல அப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூட வயதில் அடிக்கடி இந்த மலை மேல் ஏறி தேனருவிக்குச் சென்றிருக்கிறேன். காலையில் அம்மா தோசை வார்த்துத் தருவார்கள். கையில் எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் மேலே ஏறுவோம். மதிய நேரத்தில் தோசை சற்றே கடினமாக இருக்கும். அப்படியே அந்தத் தேனருவித் தண்ணீரில் தோசையை ஒரு முக்கு முக்கி, சாப்பிட்டால்... அவ்வளவு டேஸ்ட். தண்ணீர் தெள்ளத்தெளிவாக இருக்கும். அருவிகள் நம் தாய் போன்றவை. அதுபோன்ற வாய்ப்பு இனியும் கிடைக்குமா என்பது சந்தேகம். காரணம் எல்லாவற்றுக்கும் பாதுகாப்புக் காரணம் என்று சொல்வது தற்போது வழக்கமாகி விட்டதே! தீபாவளியை ஒட்டி செண்பகாதேவி அருவிக்கு செங்கோட்டை நண்பர்கள் ஐவரோடு சென்று வந்தேன். வேறு யாருமே அந்த மலைப்பகுதியில் இல்லை. சிற்றருவியிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மிகவும் அன்யோன்யமான அருவிக்கு, அன்யோன்யமான காவலர் நண்பர் ஒருவர் அங்கே இருந்ததால், நீண்ட நாட்களுக்குப் பிறகு செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. அந்தப் படங்களை இங்கே நீங்கள் காணலாம்...

Friday, October 23, 2009

ACHARYA SRI MANAVALA MAMUNI JAYANTHI (23.10.09) - JUST TO RECALL HIS HISTORY



Sri Manavala Mamunigal is a saint from Srivaishnava Thenkalai Sect, Incarnation of AADISESHA and known as Punaravatharam of SRI RAMANUJAACHARYA.

He is the last acharya for Srivaishnavas in the lineage of Acharya. He was born in Alwar Thirunagari, Tamilnadu... in AD 1370.

His birth star is MOOLAM. KAUNDINYA GOTHRAM OF GOMATAM FAMILY.
His birth name was ALAGIYA MANAVALA PERUMAL NAYANAR. Other names were Ramyajamathru, Saumyajamatru, Visada-Vak-Sikhamani Yathindrapravanar, Varayogi, varavaramuni. He (godly man) was married at the age of 16 years.

He had only son by name RAMANUJAN and this Ramanujan had two sons namely 1) Jeyar Nayanar other is 2) Vedapiran Bhattar, who had no issues. Where as Jeyar Nayanar continued his family tradition through his son and present person who is now maintaining Sri ManavalaMamuni Sannidhi in Srirangam is Sri Gomatham Yatiraja Sampath Kumaracharya B/O Sri Gomatham Sadagopacharya now occupying 24th generation in family hereditary lineage.

SRI MANALAVA MAMUNI’S LIFE – IN BRIEF

1.BIRTH DETAILS
Birth Place Alwar Thirunagari (Near Thirunelveli)
Date of Birth (Avatharam)
Day : Thursday
Star : Moolam
Thithi : Chathurthi
Yoga : Sukarma
Month : Thula (aippasi in Tamil Month)
Date : Thula 26
Year : Saadarana Naama Samavatsaram 1370 AD

2. MARRIAGE
Krodhana Samvatsaram
Makara Masam 1386 AD (February)

3. EDUCATION
Receiving Scholarly award in Sanskrit at his 31st age Vikarma Samvatsaram

4. ADMINISTRATOR
Sri Ranganatha Temple, Srirangam, TamilNadu At his age 45 Jayanama Samvatsara

5. SANYASA
At his age 45 Vijiyanama Samvatsara
1415 ad April In “Periya Thiru Mandapam” From Sri Sri Sri Satakopa Mamuni Jeeyar

6. Awards & TITLES
Sri Sailesa Dayaapaathram (By Lord Sri Ranganatha)
Yatheendra Pravanar
Ubhaya Vedanthaachaaryar
Periya Jeeyar
Kutti Bhashyam
2 years disclosure on subject “EADU” Ended on Sunday Morning Moolam Poornima Mithuna Maasam Ananda Samvatsaram At the age of 65

7. ACHARYA
Panchasamskara Deeksha from Thiruvoimoli pillai alias Sri Sailacharya

8. AARADHYA PERUMAL
Sri Rangaraja with Ubhaya Nachiar and Sri Ramanujar

9. ACHIEVEMENTS
1. He became Acharya to Sri Ranganatha Perumal at the end of his two years disclourses.
2. Established 8 Mutts and appointed “Astadiggajas”
3. Moksha Samskara to Tamrind Tree near Dharba Sayana.
4. Establishing Visistadwaita in “Mathura” North India
5. Coming out of Burning Fire and exposing as Adisesha In a mutt in Thonnur.
6. Directed a rich Senior Citizen (Naasthika) in UP Thiru a letter to live as Srivaishnava.
7. Surrendering all of his assets to Sri Ranganatha Temple And its library.

10. NINE DICIPLES
1) Senai MudaliYandan.
2) Kandadai Poretha Nayanar.
3) Kandadai Annappan.
4) Kandadai Thirukkoppurathi Nayanar.
5) Kandadai Naranappa.
6) Kandadai Tholapparappai.
7) Kandadai Alaitha Vaalpitha Perumal.
8) Yettur Singaracharyar.
9) Naalur Satakopa Daasar.

11. HIS WORKS
1) Commentaries onTheeraparai Yaamini Dasakam Eadu
Sri Vachana Bhushanam
Thathvathrayam
Mumukshappadi
Aacharya Hridayam
Periyaalwar Thirumoli
Ramanuja Noothandadhi
Jnanasara
Prameyasara
2) Writings
Upadesa Rattnamale
Tiruvoimoli Nootrandadhi
Tiruvaradhana Kramam
Pramana Sangraha krithi

12. AVATHRA SAMAPTHI
Saturday after sunset
Star : Sravana
Thithy : Dwadasi
Paksam : Krishna
Masam : Kumba
Samvatsaram: Ruthirodari Feb-March of 1444 AD.

Lived for 73 Years 4 Months 22 Days

Sunday, October 18, 2009

கதை சொல்லும் துவாரபாலர் சிலைகள்


கதை சொல்லும் துவாரபாலர் சிலைகள்

சிவன்கோட்டை... இதுதான் ஊரின் பழங்காலப் பெயராம். இன்னும் நிறைய பெயர்க் காரணங்களைச் சொல்கிறார்கள். சிருங்கேரி ஸ்வாமிகள் பதினைந்து வருடங்களுக்கு முன் இங்கே வந்திருந்தபோது, இந்த ஊருக்கு செழுங்கோட்டை என்று பெயராம்... அதுவே செங்கோட்டை ஆனது என்று சொன்னதாக நினைவு.

எனக்கு என்னவோ, சிவன்கோட்டைதான் பழைய பெயரோ என்று தோன்றுகிறது.
காரணம், சிவன் அடியார்கள் இங்கே அதிகம் பேர் இருந்தார்களாம். சித்தர்கள், மகான்கள், தவசீலர்கள் நிறைந்திருந்தனராம். நகரைச் சுற்றிலும் ஏராளமான மகான்களின் ஜீவசமாதிகள் இருப்பதை இப்போதும் காண்கிறோம்.

முன்னர், கேரளத்தின் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்திருந்தது இந்தச் சிறிய நகரம். 1956ல்தான் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்துடன் இந்த ஊர் இணைக்கப்பட்டது. 800 ஆண்டுகளுக்கு முன் நல்லூர்ராஜா என்பவரால் ஆண்டுவந்த பகுதி இது என்கிறது சரித்திரம். சிவன்கோட்டையின் மேற்குப் புறத்தில் இருந்த நல்லூர்கால் பகுதியில் கோட்டை அமைத்து, மகாதேவன் கோயில், அரண்மனை தீர்த்தக் குளம் போன்றவற்றை அமைத்தானாம். இப்போது காலம் சிதைத்த எச்சங்களே மிஞ்சியுள்ளன. இந்தக் கோட்டையை வைத்தே இந்த ஊருக்கு பெயர் வந்திருக்க வேண்டும். இப்போது, மேலூர் பகுதிக்கு மேற்கே, சிதிலமடைந்த சிற்சில மண்டபங்கள் காணக் கிடக்கின்றன. ஒரு முறை, செங்கோட்டை சுந்தரராஜப் பெருமாள், வேடுபறி உற்ஸவத்தின்போது, பெருமாளோடு இந்த மேற்குப் பகுதிக்குப் போயிருந்தேன். அதிகம் ஆட்கள் புழங்காத பகுதி. அப்போது அங்குள்ளவர்கள் சிலர் அந்த இடத்தைப் பற்றி சில தகவல்களைச் சொன்னார்கள். தற்போது கோட்டை போன்ற அமைப்பு இங்கே இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கற்பனைதான் செய்ய முடிகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கற்கள் சிதறிக் கிடக்கின்றன. அவ்வளவுதான்! இந்த சிவன்கோட்டையே காலப்போக்கில் மருவி, செங்கோட்டை ஆனதாகச் சொல்கிறார்கள்.

நீர்வளம் மிகுந்த இந்த நகரைச் சுற்றி 32 குளங்கள் உண்டு. திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த இந்த ஊரிலிருந்து எவரேனும் ஒருவர், திருவாங்கூர் மகாராஜாவை சந்திக்கச் சென்றால், ரெட்டைக்குளம் தண்ணீர் புன்னை மரத்தை தொட்டுட்டதா? என்றுதான் கேட்பாராம். அதுதான் கடைசிக் குளம். அந்தக்குளம் நிரம்பினால் முப்போகம் விளைவது உறுதி என்பது அவருக்குத் தெரியும்.

இன்றும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அடையாளங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் செங்கோட்டையின் நுழைவுப் பகுதியே வித்தியாசமாக இருக்கும். ஊருக்குள் வருபவர்களை வரவேற்று ஒரு வரவேற்பு வளைவு. அதன் இருபுறமும் கோயில் சந்நிதியில் இருப்பதுபோல், துவாரபாலகர்கள் சிலைகள் ஐந்தடி உயரத்தில் காட்சி தருகின்றன. வரவேற்பு வளைவின் மேற்பகுதியில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் சங்கு முத்திரை உள்ளது.

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானமே ஆன்மீக பூமியாக விளங்கியது. சமஸ்தானத்தின் நுழைவுப் பகுதியாக செங்கோட்டை இருந்ததால், அங்கே துவார பாலகர் சிலைகள் வைக்கப்பட்டன. நகரில் பழைமை வாய்ந்த கோயில்கள். சுற்றிலும் மகான்களின் திவ்ய சமாதிகள். எனவே, இந்தச் சிலைகள் பொருத்தமான ஏற்பாடுதான்!

ஊருக்குள் நுழையும்போது நாம் காணும் வலப்புற சிலை, உயர்த்திய கையில் ஒரு விரலைக் காட்டி, மற்ற கரம் மடித்து வைத்தபடி, ஊருக்குள் நுழைபவர்கள் ஒரு நிலைப்பாடுடன், மனதை அலைபாயவிடாமல் அமைதியாக வாருங்கள் என்றும், இடதுபுற சிலை, இறைவனை நம்பி இங்கு வந்தவர்கள், மனபாரம் அகற்றி வெளியேறுங்கள் என்ற தத்துவத்தை விளக்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கடந்துதான், ஆரியங்காவு, அச்சங்கோயில், சபரிமலை என கேரளத்தின் முக்கியமான தலங்களுக்குச் செல்ல வேண்டும்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி என எல்லா ஊர்களில் இருந்தும் செங்கோட்டைக்கு பஸ் வசதி உள்ளது. ரயில் வசதி உண்டு. நீங்கள் யாரேனும் செங்கோட்டை வழியில் சபரிமலைக்கு, பம்பைக்கு செல்வதாயிருந்தால், சற்று வண்டியை நிறுத்தி இந்த துவாரபாலகர் சிலைகளையும் தரிசித்து, ஆசி பெற்றுச் செல்லுங்களேன்..!

Thursday, September 24, 2009

Tiruppur Krishnan's comment about me in Amudhasurabhi


அமுதசுரபி மாத இதழில் அதன் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள் அளிக்கும்போது, அடியேனைப் பற்றி குறிப்பிட்ட வார்த்தைகள். 2009 ஏப்ரலில் இப்படி எழுதினார்.